பேருந்துக் காதல்
July 22, 2013
அந்திமாலை வெள்ளிக் கிழமை வீடுதிரும்ப
வேகமாய் ஒரு பேருந்தில் ஏறினேன்,
அமர இடமின்றி ஓரமாயொரு
கம்பியில் சாய்ந்து நின்றேன்..
சிலநேரம் போனபின்னே முன்இருக்கையில்
சிகையில்லா ஒருசிற்பம் என்னைக்
கண்டதைக் கண்டு கல்லானேன்!
பிராண வாயு பற்றாகுறையா??
இல்லை சுவாசிக்க மறந்தேனா?
ஒருவருக் ஒருவர் தெரியாமல்
ஒருவரை ஒருவர் பார்க்க
காரணம் தேடிக்கண்டு கண்டேன்!
சேருமிடம் சேர்ந்தபின் தான் எதையோ மறந்து
இறங்கிய உணர்வு, நேரம் தவிர!
கடைசியில் ஜன்னல் வழியே எட்டிப்பார்த்த
கண்களுக்கு கண்களால் சொல்லி வந்தேன்,
‘காலம் மீண்டும் காணச்செய்யும்’ என!